ராஜம் கிருஷ்ணன்

ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) மூத்த தமிழக பெண் எழுத்தாளர் ஆவார். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
ராஜம் கிருஷ்ணன் கூட்டுக்குடும்பச்சூழலில் போராடி எழுத்துலகுக்கு வந்தார். ராஜம் கிருஷ்ணனின் முதல் சிறுகதையான ‘வெள்ளி டம்ளர்’ 1946-ல் வெளிவந்தது. ராஜம் கிருஷ்ணன் கலைமகள் இதழில் தொடர்ந்து எழுதியவர், தொடக்கத்தில் அவருடைய நூல்களை கலைமகள் காரியாலயம் வெளியிட்டது.
நாவல்கள் 1948-ல் ‘சுதந்திர ஜோதி’ என்ற நாவல் மூலம் எழுத்துலகில் நாவலாசிரியராக அறிமுகமானார். தன் கணவர் மின்வாரிய பொறியாளராகப் பணியாற்றியமையால் அவருடன் வெவ்வேறு ஊர்களுக்கு செல்வதும், அங்குள்ள வாழ்க்கையை ஆராய்ந்து நாவல்களாக எழுதுவதும் அவருடைய வழக்கம்.
1948-ல் ‘சுதந்திர ஜோதி’ என்ற நாவல் மூலம் எழுத்துலகில் நாவலாசிரியராக அறிமுகமானார். ராஜம் கிருஷ்ணன் நாற்பது நாவல்கள் எழுதியிருக்கிறார். கோவா சுதந்திரப்போராட்டத்தின் பின்னணியில் 1969-ல் வளைக்கரம் என்னும் நாவலை எழுதினார். 1970-ல் உப்புகாய்ச்சும் மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து கரிப்புமணிகள் என்னும் நாவலை எழுதினார். நீலகிரி படுகர் இன பழங்குடிகளின் வாழ்க்கையை குறிஞ்சித்தேன் என்னும் நாவலில் ஆராய்ந்தார். ‘முள்ளும் மலர்ந்தது’ என்ற சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையரைப் பற்றிய நாவல்.கம்யூனிஸ்டு தலைவரான மணலூர் மணியம்மை பற்றி பாதையில் பதிந்த அடிகள் என்னும் நாவலையும் எழுதியிருக்கிறார்.
பெண்ணியப்பார்வை ராஜம் கிருஷ்ணன் தமிழ்ப்பெண்களின் சமூகவிடுதலை பற்றிய தொடர்ச்சியான ஆய்வுகளை முன்வைத்த படைப்பாளி. ‘காலம்தோறும் பெண்’ என்னும் தொகுப்பில் சமூகநிலையில் பெண்கள் கீழே சென்ற சித்திரத்தையும் ‘காலம்தோறும் பெண்மை’ என்னும் கட்டுரைத்தொகுப்பில் பெண்மை பற்றிய கருத்துருவங்கள் உருவான முறையையும். ‘யாதுமாகி நின்றாய்’ தொகுப்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களின் வாழ்க்கையையும் ஆராய்ந்து எழுதியிருக்கிறார். இராஜம் கிருஷ்ணன் அவர்களின் பெண்ணிய சிந்தனைகள் இரு தொகுதிகளாக வெளிவந்தன.
** விருதுகள் **
- 1950 - நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
- 1953 - கலைமகள் விருது (நாவல்: பெண் குரல்)
- 1973 - சாகித்திய அகாதெமி விருது (நாவல்: வேருக்கு நீர்)
- 1975 - சோவியத் லாண்ட் நேரு விருது
- 1980 - இலக்கிய சிந்தனை விருது (கரிப்புமணிகள்)
- 1983 - இலக்கிய சிந்தனை விருது (சேற்றில் மனிதர்கள்)
- 1991 - திரு.வி.க. விருது
** நாவல்கள் **
- சுதந்திர ஜோதி - 1948
- குறிஞ்சித்தேன் - 1963
- வளைக்கரம் - 1969
- வேருக்கு நீர் - 1973
- ரோஜா இதழ்கள் - 1974
- கரிப்பு மணிகள் - 1980
- சேற்றில் மனிதர்கள் - 1983
- அவள்
- அன்னையர்பூமி
- அலை வாய்க்கரையில்
- இடிபாடுகள்
- உத்தரகாண்டம்
- உயிர் விளையும் நிலங்கள்
- கூடுகள்
- கூட்டுக் குஞ்சுகள்
- சுழலில் மிதக்கும் தீபங்கள்
- கோடுகளும் கோலங்களும்
- பாதையில் பதிந்த அடிகள்
- புதியதோர் உலகம் செய்வோம்
- புதிய சிறகுகள்
- பெண்குரல்
- வனதேவியின் மைந்தர்கள்
- முள்ளும் மலர்ந்தது
- மலர்கள்
- மாணிக்க கங்கை
- மாறி மாறி பின்னும்
- ரேகா
** சிறுகதைகள் **
- அழுக்கு
- அல்லி
- அலைகள்
- ஊசியும் உணர்வும்
- கதைக்கனிகள்
- கல்வி
- களம் னை
- கனவு
- காக்கானி
- கிழமைக்கதைகள்
- கைவிளக்கு
- சிவப்பு ரோஜா
- நித்திய மல்லிகை
- பச்சைக்கொடி
- புதிய கீதம்
- மலைரோஜா
- மின்னி மறையும் வைரங்கள்
- வண்ணக்கதைகள்
- விலங்குகள்,
- சத்திய வேள்வி
** பெண்ணியக்கட்டுரைகள் **
- காலம்தோறும் பெண்
- காலம்தோறும் பெண்மை
- யாதுமாகி நின்றாய்
- இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
- இராஜம் கிருஷ்ணன் அவர்களின் பெண்ணிய சிந்தனைகள் (இரு தொகுதிகள்)
** வாழ்க்கை வரலாறு **
- டாக்டர் ரங்காச்சாரி - 1965
- பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
- சத்திய தரிசனம்
** தன்வரலாறு **
- காலம் 2014