தமிழ் அறிஞர்கள் நாள்
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி, நம் அன்னைத் தமிழிற்கு அணிசேர்த்த அறிஞர்களை நாம் என்றும் நினைவு கூறும் வகையில், நூற்றாண்டுகளை காணுகின்ற அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் விழா எடுப்போம் என சிகாகோ தமிழ்ச் சங்கம் அறிவித்தது. 2021 ஆம் ஆண்டு துவங்கிய இந்த மரபு “தமிழ் அறிஞர்கள் நாள்” என நடைப்பெற்று வருகிறது.
காலத்தைக் கடந்து நம் தமிழ் மொழி செழுமை அடைந்து வருகிறது. சங்க காலம், இடைக்காலம் மற்றும் தற்காலம் என நம் மொழிக்கு அணி செய்து வருபவர்கள் தமிழ் அறிஞர்கள். நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருக்கும் மரத்தை நட்டு வந்தவர்கள், வருபவர்கள். நாம் அந்த மரத்தின் நிழலில் இளைப்பாறி புத்துணர்ச்சி பெறுபவர்கள். நாமும் மரம் நடுபவர்களாக மாறலாம், அதற்கான உந்துதலைத் தருவது நமக்கு முன் மரம் நட்டோரும் நம் அன்னைத் தமிழும் ஆகும். அத்தகைய காலத்தில் கரைந்த தமிழ் அறிஞர்களைப் போற்றும் நிகழ்வே “தமிழ் அறிஞர்கள் நாளாகும்.”
சிகாகோ தமிழ்ச் சங்கம் விழா எடுத்த அறிஞர் பெருமக்கள்
2021 ஆம் ஆண்டு: மகாகவி பாரதியார், உவமைக் கவிஞர் சுரதா 2022 ஆம் ஆண்டு: வ. உ. சிதம்பரனார், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா, எழுத்தாளர் அகிலன்
இந்த ஆண்டு நாம் விழா எடுக்கின்ற அறிஞர் பெருமக்கள்
தொ.மு.சி.ரகுநாதன், புலியூர்க் கேசிகன், கலைஞர் மு.கருணாநிதி, கு. அழகிரிசாமி