குன்றக்குடி அடிகளார்
குன்றக்குடி அடிகளார் (1925 – 1995)
அறிமுகம்
குன்றக்குடி அடிகள் (11 சூலை 1925 - 15 ஏப்ரல் 1995) சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். குன்றக்குடி ஆதீனத்தின் மடாதிபதியாக இருந்தவர்.
பேச்சுக்கு நிகராக, எழுத்திலும் வல்லவரான அடிகளார், தம் வாழ்நாளில் ஏராளமான நூல்களை எழுதியதோடு, மணிமொழி, தமிழகம், அருளோசை முதலிய இதழ்களையும் நடத்தினார். அவர் ஆரம்பித்து, இன்றளவும் வந்துகொண்டிருக்கும் மக்கள் சிந்தனை, அறிக அறிவியல் ஆகிய இதழ்களும் குறிப்பிடத்தக்கன.
விருதுகள்
- தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது 1986ல் வழங்கப்பட்டது.
- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் (D.Litt) 1989ல் வழங்கிச் சிறப்பித்தது.
- இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு, 1991ல் தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது.
** எழுதிய நூல்கள் **
** சமய இலக்கியங்கள் **
அப்பர் விருந்து, அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர், திருவாசகத்தேன் தமிழமுது, சமய இலக்கியங்கள், நாயன்மார் அடிச்சுவட்டில், ஆலய சமுதாய மையங்கள் (தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது), நமது நிலையில் சமயம் சமுதாயம், திருவருட்சிந்தனை, தினசரி தியான நூல், குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16 தொகுதிகள்
** இலக்கியங்கள் ** திருவள்ளுவர், திருவள்ளுவர் காட்டும் அரசியல், திருவள்ளுவர் காட்டும் அரசு, குறட்செல்வம், வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை, திருக்குறள் பேசுகிறது, குறள்நூறு, சிலம்பு நெறி, கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம், பாரதி யுக சந்தி, பாரதிதாசனின் உலகம், கவியரங்கில் அடிகளார் (கவிதைகள்), மண்ணும் மனிதர்களும் (தன்வரலாறு) அடிகளார் எழுதிய சிறுகதைகள், அறிவொளி இயக்கத்தின் மூலமாக மக்களைச் சென்றெய்தியது. சில நாடகங்களும் அடிகளாரால் எழுதப்பெற்று அரங்கேறியுள்ளன. அவரது இறுதிக்காலத்தில் தினமணியில் எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தார்.
Never miss a information from us, subscribe to our newsletter